தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், இந்தியாவில் 101 கோடி பேர் உள்ளனர்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 1:47PM by PIB Chennai

இந்தியாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தற்போது சுமார் 101 கோடி  மக்களைஅதாவது மக்கள் தொகையில் 68 சதவீதத்திற்கும் அதிகமானோரை சென்றடைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இன்று (31.07.2026) புதுதில்லியில் நடைபெற்ற 4-வது உலகளாவிய தொழில்துறை உறவுகள் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 101 கோடி பேர் என்ற இந்த எண்ணிக்கைகடந்த வாரம் தராபாத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் தொழிலாளர் அமைச்சர்கள் கூட்டத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் தெரிவிக்கப்பட்டது என்றும்இது இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரத்திற்கு சான்றாக விளங்குகிறது என்றும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பு உருவாக்கமும் இணைந்து ஏற்படுவதை மத்திய அரசு உறுதிசெய்வதாக அவர் தெரிவித்தார்.  அரசு, தொழில்துறையினர், தொழிலாளர்கள்தொழிற்சங்கங்கள் ஆகியோருக்கு இடையே தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.

தேசிய வளர்ச்சிக்குத் தொழில்மயமாக்கல் இன்றியமையாதது என்று கூறிய அமைச்சர்வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும்பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும்பெண்களுக்கு அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதிலும் சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு செயல்பாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ்நிலையான வரிவிதிப்புஉயரும் சேமிப்புஅதிக வாங்கும் திறன், அதிகரித்த உற்பத்தி ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டை அகில இந்திய வேலை வழங்குவோர் அமைப்புஇந்திய வர்த்தக-தொழில் கூட்டமைப்பு, சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292305&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SE


(रिलीज़ आईडी: 2292675) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam