பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியாகி உதம் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 31 JUL 2026 9:12AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மாபெரும் புரட்சிகர தியாகி உதம் சிங்கின் தியாக தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். உதம் சிங்கின் வாழ்வில் பொதிந்துள்ள துணிச்சல், வீரம் ஆகியவை தாய்நாட்டின் கௌரவத்தையும், சுயமரியாதையையும் நிலைநாட்ட நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்.  

வீரம் எனும் சூரியன் ஒருபோதும் நிரந்தரமாக அஸ்தமிப்பதில்லை என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது. சூரியன் மீண்டும் உதித்து பிரகாசிப்பதைப் போலவே, ஒரு வீரனும் தன் வீரத்தால் எல்லாத் துன்பங்களையும் வெல்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292162&reg=3&lang=1

***

SS/PLM/RJ/SH


(रिलीज़ आईडी: 2292361) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam