ஜவுளித்துறை அமைச்சகம்
தில்லி ஐஐடி-யில் கைத்தறி தொழில்நுட்பத்திற்கான செயல்திறன் மையத்தை மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் ஆகஸ்ட் 3-ம் தேதி திறந்து வைக்கிறார்
प्रविष्टि तिथि:
30 JUL 2026 3:36PM by PIB Chennai
புதுதில்லி, ஜூலை 30, 2026
தொழில்நுட்பத்தால் இயக்கப்படும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் கைத்தறி சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முன்முயற்சியாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஐஐடி தில்லியில் கைத்தறி தொழில்நுட்பத்திற்கான செயல்திறன் மையத்தை ஆகஸ்ட் 3 அன்று திறந்து வைப்பார். மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா, ஜவுளித்துறை செயலாளர் திருமதி. நீலம் ஷமி ராவ் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்கள்.
11.99 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்ட இந்தச் செயல்திறன் மையம், இந்தியாவின் வளமான கைத்தறி பாரம்பரியத்தை அதிநவீன ஆராய்ச்சி, புதுமை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து, இந்தத் துறையின் போட்டித்திறன், நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய அணுகுமுறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியாவின் வளமான நெசவு மரபுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் கைத்தறி துறையை நவீனமயமாக்குவதற்கான அரசின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இது குறிக்கிறது. ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம், நெசவாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். வளர்ந்து வரும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வாய்ப்புகளுக்கு இந்திய கைத்தறியை நிலைநிறுத்தும் ஒரு வலுவான சூழல் அமைப்பை இந்த மையம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291701®=3&lang=1
***
TV/PKV/SE
(रिलीज़ आईडी: 2292037)
आगंतुक पटल : 10