புவி அறிவியல் அமைச்சகம்
கடல், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து இந்தியாவில் சூப்பர் எல்-நினோவின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
30 JUL 2026 2:22PM by PIB Chennai
மத்திய புவி அறிவியல் அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையம் எல்-நினோ உள்ளிட்ட பருவநிலை காரணிகளால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு வழக்கமான பருவகால முன்னறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வானிலை சார்ந்த தரவுகளை இந்த மையம் வழங்கி வருகிறது.
பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை இந்த மையம் முன்கூட்டியே வழங்கி வருகிறது. உலக வானிலை ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றால் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சூப்பர் எல்-நினோ சூழல் இந்தியாவில் வகைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள மத்திய பசுபிக் பெருங்கடலில் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளின் அளவைப் பொறுத்து எல்-நினோ நிகழ்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. இதன்படி, 2026-ம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலத்தில் எல்-நினோ சூழல் இந்தியாவில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் எல்-நினோ சூழல் வலுவான நிலையை அடையக் கூடும் என்றும் இருப்பினும் இந்தியாவில் அதன் தாக்கம், கடல், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291639®=3&lang=1
***
TV/SV/RJ/SE
(रिलीज़ आईडी: 2291995)
आगंतुक पटल : 12