மருந்துகள் துறை
மருத்துவ உபகரண உற்பத்தி மாநாடு அடுத்த மாதம் புதுதில்லியில் நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
29 JUL 2026 5:18PM by PIB Chennai
மத்திய ரசாயன அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மருந்து உற்பத்தி துறை, இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்புடன் இணைந்து இந்திய மருத்துவ உபகரண உற்பத்தி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இந்த மாநாடு அடுத்த மாதம் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில், தரமான மருத்துவ கருவிகளின் உற்பத்தி மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் நோக்குடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறை ஆணையர்கள், சுகாதார நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், உலக அளவிலான துறை சார்ந்த நிபுணர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் மருத்துவ கருவி உற்பத்தி துறை, மருத்துவ தொழில்நுட்பத்துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 8-ம் தேதியன்று நடைபெறும் தற்சார்பு மருத்துவ தொழில்நுட்பம் குறித்த அமர்வில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றுகிறார். உலகளவில் பிற நிறுவனங்களுடன் போட்டியிடும் தன்மையை வளர்த்துக்கொள்வது குறித்தும், புதுமையான மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்வதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை குறித்து அவர் இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டில் மருந்து துறை செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, மத்திய சுகாதாரத்துறை செயலர் திருமதி புண்யா சலீலா ஸ்ரீவஸ்தவா, இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி, நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ் உட்பட கொள்கை வகுப்பாளர்கள், மருத்துவ கருவி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், தொழில்துறை சார்ந்த நிபுணர்கள், புத்தொழில் நிறுவனங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2291191®=3&lang=1
***
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2291559)
आगंतुक पटल : 9