நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
ஜனநாயக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
29 JUL 2026 1:41PM by PIB Chennai
ஜனநாயக நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், நாடாளுமன்றம் சார்ந்த கல்வியை வலுப்படுத்தும் வகையிலும், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் மூன்று பிரிவுகளில் இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
போட்டி அடிப்படையிலான இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில், தில்லி அரசின் கல்வி இயக்குநரகம், புதுதில்லி மாநகராட்சியில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பங்கேற்பு அடிப்படையிலான இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியில் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்கும் வகையில் தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தன்னார்வ திட்டமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பாலினம், சாதி, நம்பிக்கை, மதம், இனம், பிராந்தியம் அல்லது இருப்பிடம் ஆகியவற்றை கடந்து நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மக்களும் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.
பங்கேற்பாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதலின் அடிப்படையில் நிறுவனம் அல்லது குழு பங்கேற்பு பிரிவின் கீழ், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை நடத்துவதற்கும் அல்லது தனிநபர் பங்கேற்பு பிரிவின் கீழ், இணையவழி வினாடி-வினா நிகழ்ச்சியிலும் பங்கேற்கலாம்.
இந்தப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டத்தின் கீழ், சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுவரை இந்தப் போட்டிகளில் 1.7 லட்சம் மாணவர்கள் / குடிமக்கள் இணையவழியில் பங்கேற்றுள்ளனர்.
மக்களவையில் இன்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மேக்வால் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290973®=3&lang=1
****
TV/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2291406)
आगंतुक पटल : 5