நிதி அமைச்சகம்
2025–26-ம் நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த வராக்கடன் விகிதம் 1.9% என்ற மிகக் குறைவான அளவை எட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
28 JUL 2026 3:27PM by PIB Chennai
ஆரோக்கியமான இருப்புநிலைக் குறிப்புகள், வரலாற்றுச் சிறப்புமிக்க அதிகபட்ச லாபம், பல தசாப்தங்களில் இல்லாத அளவிலான குறைந்தபட்ச மொத்த வராக்கடன் விகிதம் ஆகியவற்றின் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நிதிசார் நிலைத்தன்மை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
மேலும், பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து கடன் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. சில்லறை வர்த்தகம், விவசாயம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற பிரிவுகளில், பொதுத்துறை வங்கிகள் பதிவு செய்துள்ள துறை வாரியான கடன் வளர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, வர்த்தக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் குறுகிய கால பணப்புழக்கச் சிக்கல்களைச் சமாளிக்க, 2026 மே மாதத்தில், அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் 5.0-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தகுதியுள்ள நபர்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடுதல் கடன் வசதியின் கீழ், திருப்பிச் செலுத்தப்படாத கடன் தொகைக்கு, தேசிய கடன் உத்தரவாத அறக்கட்டளை நிறுவனம் மூலம், கடன் வழங்கும் உறுப்பு நிறுவனங்களுக்கு இத்திட்டம், கடன் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை வழங்குகிறது. இத்திட்டம் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 100% - வீத கடன் உத்தரவாத பாதுகாப்பையும், எம்எஸ்எம்இ அல்லாத நிறுவனங்கள், அட்டவணைப்படுத்தப்பட்ட பயணியர் விமானப் போக்குவரத்துத் துறைக்கு 90% உத்தரவாத பாதுகாப்பையும் வழங்குகிறது. இதற்கான மொத்த கடன்தொகைக்கான உச்சவரம்பு ரூ 2,55,000 கோடியாகும். இதில் ரூ 5,000 கோடி, குறிப்பாக, அட்டவணைப்படுத்தப்பட்ட பயணியர் விமானப் போக்குவரத்துத் துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சௌத்ரி, எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290384®=3&lang=1
(Release ID: 2290384)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2290765)
आगंतुक पटल : 9