புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
பிரதமரின் விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்டம், பிரதமரின் சூரியசக்தி வீடு திட்டங்களை ஒருங்கிணைத்து சூரியசக்தி பயன்பாடு, கிராமப்புற எரிசக்தி தன்னிறைவை விரைவுபடுத்த மத்திய அரசு ஊக்குவிக்கிறது
प्रविष्टि तिथि:
28 JUL 2026 3:40PM by PIB Chennai
பிரதமரின் விவசாயிகளுக்கான சூரியசக்தி மின் திட்டங்களின் பரவலான பயன்பாட்டை எளிதாக்க சாத்தியக்கூறுமிக்க இடங்களில் பிரதமரின் விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்டம், பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டங்கள் ஆகியவற்றை உரிய மத்திய – மாநில திட்டங்கள், நிதி ஆதாரங்களுடன் ஒருங்கிணைப்பதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. உதாரணமாக பிரதமரின் பிரதமரின் விவசாயிகளுக்கான சூரியசக்தி மின்திட்ட வழிகாட்டுதல்கள் மற்ற மத்திய அரசுத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பை அனுமதிக்கின்றன.
எளிதாக நிதியுதவி பெறுவதற்கான வேளாண் உட்கட்டமைப்பு நிதித்திட்டம்.
தனி வேளாண் மின் விநியோகக் கட்டமைப்புகளை சூரியசக்தி மயமாக்குவதற்காக மேம்படுத்தப்பட்ட விநியோகத்துறைத் திட்டம்.
நுண்ணுயிர் பாசனத் தொழில்நுட்பங்கள், ஒரு துளி அதிகப் பயிர், திட்டத்தை ஊக்குவித்தல்.
வேளாண் நீரேற்றும் பம்புகளை எரிசக்தித் திறன்மிக்க பம்புகளாக மாற்றுதல் ஆகிய மத்திய அரசின் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பை அனுமதிக்கின்றன.
இத்தகவலை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290403®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2290748)
आगंतुक पटल : 5