உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:18PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்கள், லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள நாட்டின் வட எல்லையையொட்டி அமைந்துள்ள 19 மாவட்டங்களில் உள்ள 46 பகுதிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் முழுமையான வளர்ச்சிக்காக, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தை, மத்திய நிதியுதவித் திட்டமாக 2023 பிப்ரவரி 15 அன்று அரசு அங்கீகரித்தது. 2023-ல் இத்திட்டம் தொடங்கப்பட்ட தினத்திலிருந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் (MHA) ரூ 3065.32 கோடி மதிப்பீட்டில், பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தில், 832 திட்டங்கள், இமாச்சலப் பிரதேசத்தில் 98, லடாக் யூனியன் பிரதேசத்தில் 79, சிக்கிமில் 87,  உத்தராகண்டில் 152 திட்டங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இதுவரை 316 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மேலும், பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகளின் ஒருங்கிணைப்புத் திட்டத்தின் கீழ், 1658 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், முன்னுரிமை அடிப்படையில் முழுமையான வளர்ச்சிக்காக 662 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்தார்.

  மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290369&reg=3&lang=1

(Release ID: 2290369)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290746) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali