உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சைபர் குற்றத் தடுப்பு மையம்

प्रविष्टि तिथि: 28 JUL 2026 3:16PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையின் படி, காவல்துறை, பொது ஒழுங்கு ஆகியவை மாநிலப் பட்டியலின் கீழ் வருகின்றன. சைபர் (இணையவழி) மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுத்தல், கண்டறிதல், புலனாய்வு செய்தல், வழக்குத் தொடர்தல் போன்றவற்றில், மாநிலங்களின் சட்ட அமலாக்க முகமைகள் வாயிலாக, அந்தந்த மாநிலங்கள்,  யூனியன் பிரதேச அரசுகள் முதன்மையானப் பொறுப்பைக் கொண்டுள்ளன.

சைபர் நிதி மோசடி உள்ளிட்ட இணையவழிக் குற்றங்களை விரிவான, ஒருங்கிணைந்த முறையில் கையாள்வதற்கான வழிமுறைகளை வலுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் அனைத்து வகையான இணையவழிக் குற்றங்களையும் ஒருங்கிணைந்த, விரிவான முறையில் கையாள்வதற்கு ஏதுவாக, இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தை (14சி) ஒரு இணை அலுவலகமாக உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தகவமைக்கப்படும் அரசு அல்லது அதன் மூலம் தகவல் தொழில்நுட்ப இடைத்தரகர்களுக்கு அறிவிப்புகளை அனுப்பும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக ‘சஹ்யோக்’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றில் காலர் டியூன் எனப்படும் மொபைல் அழைப்பு ஒலி வாயிலான பிரச்சாரம், குறுஞ்செய்தி மூலம் செய்திகளைப் பரப்புதல், தொலைக்காட்சி, வானொலி வாயிலானப் பிரச்சாரங்கள், பள்ளி அளவிலான பிரச்சாரங்கள், திரையரங்குகளில் விளம்பரம் செய்தல், பிரபலங்களின் ஆதரவு, ஐபிஎல் பிரச்சாரம், பல்வேறு ஊடகங்களில் விளம்பரத்திற்காக மை கவ் செயலியைப் பயன்படுத்துதல், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சைபர் பாதுகாப்பு , விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகளை நடத்துதல், மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் டிஜிட்டல் திரைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.

மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2290366&reg=3&lang=1

(Release ID: 2290366)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2290698) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu