உரங்கள் துறை
2026 கரீஃப் பருவத்தில் அனைத்து மாநிலங்களிலும் போதுமான அளவு உரங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது
தமிழ்நாட்டில் 1.60 லட்சம் மெட்ரிக் டன் யூரியா கையிருப்பில் உள்ளது
प्रविष्टि तिथि:
24 JUL 2026 3:16PM by PIB Chennai
ஒவ்வொரு பயிர் பருவத்திலும் நாடு முழுவதும் உரிய நேரத்திலும் போதுமான அளவிலும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வலுவான நடைமுறையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்கூட்டிய திட்டமிடல், தொடர்ச்சியான கண்காணிப்பு, மாநில அரசுகளுடனான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், தற்போது 2026 கரீஃப் பருவத்தில், யூரியா, டிஏபி, எம்ஓபி, என்பிகேஎஸ் ஆகிய அனைத்து முக்கிய உரங்களும் மாநிலங்கள் முழுவதும் போதுமான அளவில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் யூரியா தேவை 2.5 லட்சம் மெட்ரிக் டன், இருப்பு 4.49 லட்சம் மெட்ரிக் டன் டிபிடி விற்பனை 2.89 லட்சம் மெட்ரிக் டன் 21.07.26 நிலவரப்படி இறுதிக் கையிருப்பு 1.60 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் டிஏபி உரத் தேவை 0.75 லட்சம் மெட்ரிக் டன், இருப்பு 1.02 லட்சம் மெட்ரிக் டன் டிபிடி விற்பனை 0.56 லட்சம் மெட்ரிக் டன் 21.07.26 நிலவரப்படி இறுதிக் கையிருப்பு 0.46 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், எம்ஓபி உரத் தேவை 0.58 லட்சம் மெட்ரிக் டன், இருப்பு 0.70 லட்சம் மெட்ரிக் டன் டிபிடி விற்பனை 0.40 லட்சம் மெட்ரிக் டன் 21.07.26 நிலவரப்படி இறுதிக் கையிருப்பு 0.31 லட்சம் மெட்ரிக் டன்னாகவும், என்பிகேஎஸ் உரத் தேவை 2.59 லட்சம் மெட்ரிக் டன், இருப்பு 3.80 லட்சம் மெட்ரிக் டன் டிபிடி விற்பனை 1.97 லட்சம் மெட்ரிக் டன் 21.07.26 நிலவரப்படி இறுதிக் கையிருப்பு 1.83 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.
உரங்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை , மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு பயிர் பருவத்திற்கும் முன்பாக மாநில வாரியாகவும் மாத வாரியாகவும் உரத் தேவைகளை மதிப்பிடுகிறது. இந்த மதிப்பீடுகளின் அடிப்படையில், உரத்துறை மாதாந்தர விநியோகத் திட்டங்கள் மூலம் உரங்களை ஒதுக்கீடு செய்வதுடன், அதன் இருப்பையும் தொடர்ந்து கண்காணிக்கிறது. மானிய உரங்கள் அனுப்பப்படுவது, ஒருங்கிணைந்த உர மேலாண்மை அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநில வேளாண்மை அதிகாரிகளுடன் நடைபெறும் வழக்கமான வாராந்தர ஆய்வுக் கூட்டங்கள், விநியோகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகின்றன. மாநிலங்களுக்கு இடையேயான விநியோகம் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது.
மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288824®=48&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2289138)
आगंतुक पटल : 9