மருந்துகள் துறை
நாடு முழுவதும் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
प्रविष्टि तिथि:
24 JUL 2026 12:58PM by PIB Chennai
2026, ஜூன் 30 நிலவரப்படி, நாடு முழுவதும் 20,149 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகத் திட்டத்தில் இதயநோய், புற்றுநோய் , நீரிழிவு , தொற்றுநோய், ஒவ்வாமை, இரைப்பை-குடல் சிகிச்சைக்கான மருந்துகள், ஊட்டச்சத்து மருந்துகள் போன்றவற்றை உள்ளடக்கிய 2,110 மருந்துகளும் 315 அறுவை சிகிச்சை மருத்துவப் பொருட்கள் மற்றும் சாதனங்களும் உள்ளன. அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஏறக்குறைய அனைத்து பொதுவான மருந்துகளும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
கையிருப்புப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தொடர்ச்சியான கண்காணிப்பும் உரிய திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தனிநபர் தொழில்முனைவோர், அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதன் மூலம் மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படுகின்றன. சேவை பற்றாக்குறை உள்ள வட்டாரங்கள் உட்பட, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் www.janaushadhi.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தற்போது, நாட்டின் 784 மாவட்டங்களில் 776 மாவட்டங்கள் இந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. போதிய சேவை கிடைக்காத மாவட்டங்களில் மக்கள் மருந்தக மையங்கள் திறப்பதை எளிதாக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணமின்றி இடம் வழங்குவதற்காக, இந்திய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் குழு சம்பந்தப்பட்ட நிர்வாகம்/மாவட்ட ஆட்சியருடன் தொடர்பில் உள்ளது. மேலும், மக்கள் மருந்தக மையங்களின் சேவை குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு, அவற்றை திறப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288769®=48&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2289066)
आगंतुक पटल : 9