பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள்

प्रविष्टि तिथि: 24 JUL 2026 2:01PM by PIB Chennai

நாடு முழுவதும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தத் திறன் அங்கன்வாடி இயக்கம், 2-ம் கட்ட ஊட்டச்சத்து ஆகியவற்றை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ஊட்டச்சத்து நிலவரத்தைக் கண்காணிக்க முக்கிய அம்சமாக ‘போஷான் டிராக்கர்’ என்ற செயலியை 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் அங்கன்வாடி மையங்கள், அதன் மூலம் பயன்பெறுவோர் ஆகியோரது தகவல்களும் ஊட்டச்சத்துத் தொடர்பான தரவுகளும் சேகரிக்கப்பட்டு ஊட்டச்சத்து நிலைமைக் கண்காணிக்கப்படுகிறது.

2-ம் கட்ட ஊட்டச்சத்து இயக்கத்தில் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உக்திகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இதில் ஆயுஷ் மருத்துவ நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

ஊட்டச்சத்துத் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க ஊட்டச்சத்து வாரம், ஊட்டச்சத்து மாதம் ஆகிய நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இவை மக்கள் இயக்கமாக மாறி பொதுமக்களிடையே ஊட்டச்சத்துத் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288797&reg=48&lang=1

-----

TV/PLM/SM/KR


(रिलीज़ आईडी: 2288920) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Bengali , English , हिन्दी , Gujarati