சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் தடுப்புப் பணிகளை அரசு தீவிரப்படுத்துவதுடன் மறுவாழ்வு மையங்களுக்கு அரசு ஆதரவளிக்கிறது - மத்திய இணையமைச்சர் திரு பி எல் வர்மா

प्रविष्टि तिथि: 23 JUL 2026 2:18PM by PIB Chennai

போதைப்பொருள் தடுப்புமறுவாழ்வு ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும்சேவைகளைச் சிறப்பாக வழங்குவதையும் உறுதி செய்வதற்காகசமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகம் அரசு நிதியுதவித் திட்டங்களின் செயலாக்கத்தைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

 போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல் திட்டத்தின் கீழ் அமைச்சகம் ஒரு விரிவான உத்தியைச் செயல்படுத்தி வருகிறது.

போதைப் பொருள் தடுப்புத் திட்டத்தின் கீழ்தடுப்புக் கல்விவிழிப்புணர்வு ஏற்படுத்துதல்ஆலோசனைசிகிச்சைமறுவாழ்வுக்காக மாநில அரசுகள்யூனியன் பிரதேசங்கள்தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் நிதியுதவி வழங்குகிறது. தற்போதுநாடு முழுவதும் போதைக்கு அடிமையானவர்களுக்கான 344 ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள், 155 போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்களுக்கு அமைச்சகம் நிதி ஆதரவளிக்கிறது.

மக்களவையில் உறுப்பினர் திருமதி பிரதிமா மொண்டல் எழுப்பிய கேள்விகளுக்கு, சமூக நீதிஅதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு பி எல் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288255&reg=3&lang=1

***

SS/PLM/SH

 


(रिलीज़ आईडी: 2288682) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada