இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2030-ல் நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுக்களை நடத்துவதற்கு இந்தியா தயாராக உள்ளது- மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 23 JUL 2026 2:09PM by PIB Chennai

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில்  மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுத்துறை ஒத்துழைப்பிற்காக வலுவான மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்பை முக்கியமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காமன்வெல்த் நாடுகளில் விளையாட்டு நிர்வாகம், விளையாட்டு வீரர்களின் நலன், நிறுவனங்களின் திறன் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த தொலைநோக்குப் பார்வையை அவர் எடுத்துரைத்தார். காமன்வெல்த் விளையாட்டை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை எடுத்துரைத்த அமைச்சர், அகமதாபாதில் 2030-ல் நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுக்களை நடத்துவதற்கு இந்தியா தயாராகி வருவதாகக் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையைத் தீர்மானித்துள்ளதாகவும் இந்தச் செயல் திட்டத்தில் விளையாட்டுக்கள் முக்கியத் தூணாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

2030-ல் நடைபெறவுள்ள நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், அகமதாபாதில் நடைபெறவுள்ள 13-வது காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தும் நாடு என்ற முறையில் விளையாட்டுக்களை சிறப்பான முறையில் நடத்துவதோடு காமன்வெல்த் விளையாட்டுத்துறைக்கு நீடித்த அம்சத்தை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளதாக டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288253&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2288680) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam