உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நாளை நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 23 JUL 2026 5:38PM by PIB Chennai

2026-ம் ஆண்டில் இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான பிரிக்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தை புதுதில்லியில் 2026 ஜூலை 24 அன்று நடத்துகிறது. இக்கூட்டத்திற்கு உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தலைமை தாங்குகிறார். நீடித்த வளர்ச்சி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன், பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பேரிடர்கள் அபாயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை உணரும் நிலை அதிகரித்து வரும் சூழலில் இந்த ஒத்துழைப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் அமைச்சர்கள்,  பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

பேரிடர் அபாய மேலாண்மைக்கான கூட்டுப் பணிக்குழுவை அமைத்த உதய்பூர் பிரகடனம் (2016) முதல் பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்புக் குழுவை முறைப்படுத்திய மற்றும் பிரிக்ஸ் பேரிடர் அபாயக் குறைப்பு பணித்திட்டத்தை (2025-28) ஏற்றுக் கொண்ட கஸான் பிகரடனம் (2024) வரை பிரிக்ஸ் நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு ஒத்துழைப்பு வளர்ச்சியடைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288401&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2288593) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati