சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
புதுதில்லியில் சட்டவரைவுப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
प्रविष्टि तिथि:
23 JUL 2026 10:29AM by PIB Chennai
மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்டவரைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் 36-வது அடிப்படை சட்டவரைவுப் பயிற்சி வகுப்பை புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில் (கர்த்தவ்ய பவன்) சட்டத்துறைச் செயலாளர் டாக்டர் ராஜீவ் மணி நேற்று (22.06.2026) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு முழுவதும் சட்டங்கள் குறித்த தெளிவு, தொடர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யச் சீரான சட்டவரைவு முறை மிகவும் அவசியம் எனக் கூறினார். இப்பயிற்சித் திட்டம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளின் சட்டவரைவுத் திறனை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
2026 ஜூலை 22 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 18 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சட்டவரைவுக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளவும், சட்டவரைவு திறன்களை மேம்படுத்தவும் பயிற்சி அளிப்பதை இந்த வகுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2288143®=3&lang=1
***
SS/PD/KR
(रिलीज़ आईडी: 2288333)
आगंतुक पटल : 11