சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
2026 ஜூலை 15 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 52,10,302 சிறுமிகள் எச்பிவி தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்
प्रविष्टि तिथि:
21 JUL 2026 1:52PM by PIB Chennai
நாடு முழுவதும், 14 வயதுடைய சுமார் 1.2 கோடி தகுதியுள்ள சிறுமிகளுக்கான கர்ப்பப்பைவாய் புற்றுநோய் (எச்பிவி) தடுப்பூசி முகாம் 2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கப்பட்டது. ஜூலை 15 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 52,10,302 சிறுமிகள் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர் - ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார நிலையங்கள், துணை மாவட்ட மருத்துவமனைகள் / மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட குறிப்பிட்ட அரசு சுகாதார மையங்களில் இந்தத் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மருத்துவ மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கு எச்பிவி தடுப்பூசி குறித்த விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாமின் செயல்பாட்டுத் தரவுகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் டிஜிட்டல் தடுப்பூசி தளமான 'யு-வின்' இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திஅக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286947®=3&lang=1
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2287448)
आगंतुक पटल : 8