சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பங்குதாரர்கள், பொதுமக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக, வழக்கறிஞர்கள் வரைவு (திருத்தம்) மசோதா, 2026 வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 20 JUL 2026 5:38PM by PIB Chennai

இந்திய பார் கவுன்சிலுடன் (BCI) கலந்தாலோசித்துத் தயாரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் வரைவு (திருத்தம்) மசோதா, 2026, சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துகளைக் கேட்பதற்காக கவுன்சிலால் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில், இந்த வரைவு மசோதாவை 2026 ஜூலை 18 அன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதை https://www.barcouncilofindia.org/home  என்ற இணையதளத்தில் அணுகலாம்.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களும், இந்த வரைவு மசோதா குறித்த தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும், 2026 ஜூலை 31 அன்றோ (பிற்பகல் 3:00 மணிக்குள்) அல்லது அதற்கு முன்னதாகவோdraftadvact2026bill[at]gmail[dot]com  மற்றும் lmpcell-dla[at]nic[dot]in  ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286679&reg=3&lang=1

****

TV/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2286863) வருகையாளர் எண்ணிக்கை : 77
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam