மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 20 JUL 2026 1:50PM by PIB Chennai

மாநிலங்களவையின் 271-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தொடக்கவுரையாற்றிய அவைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், அவை உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதாகக் கூறினார். ஒட்டுமொத்த அவையின் சார்பாகவும், தனது சார்பாகவும் புதிய உறுப்பினர்களை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த அவை, ஆக்கபூர்வமான விவாதங்களை மேற்கொண்டுள்ள பெருமைமிக்க மரபைக் கொண்டுள்ளது என்றும், இந்த மழைக்காலக் கூட்டத்தொடர், அத்தகைய மரபைக் பாதுகாக்கும் என்றும் தாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தொடரில்,19 அமர்வுகள் நடைபெற உள்ளதாகவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும், அவையின் மதிப்புமிக்க நேரத்தைப் பயன்படுத்துவது, நம் அனைவரது பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தொடர் முதல், உறுப்பினர்களின் இருக்கைகளில் உள்ள பல்தட ஊடக சாதனங்கள் வாயிலாக, அவையின் நடவடிக்கைகளை ஒன்பது மொழிகளில் நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், ஒரே நேரத்தில் மொழிபெயர்த்து வழங்கும் வசதியை நாடாளுமன்றச் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி படிப்படியாக அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள இருபத்திரண்டு மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். உயரிய மாண்புகளைக் கொண்டுள்ள அவையின் கண்ணியம், ஒழுக்கம், மரபுகளைக் காக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பு உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளில், கருத்து வேறுபாடுகள் இயல்பானவை என்ற போதிலும், அவையின் புனிதத்தைக் காக்கும் வகையில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இடையூறுகள் அவையின் செயல்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதை  அனுமதிக்கக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் பயனுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும், அதன் நோக்கங்களை நிறைவேற்றும் வகையிலும் அமைய, உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286512&reg=3&lang=1

***

SS/SV/KR

 


(रिलीज़ आईडी: 2286634) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada