அணுசக்தி அமைச்சகம்
லித்துவேனியாவின் வில்னியஸில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் 2026-ல் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றது
இடுகை இடப்பட்ட நாள்:
19 JUL 2026 1:42PM by PIB Chennai
2026 ஜூலை 12 முதல் 19 வரை லித்துவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் 2026 போட்டிகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் மாணவர்கள் ஒரு தங்கம், மூன்று வெள்ளி என 4 பதக்கங்களை வென்றனர்.
பதக்கங்களை வென்ற மாணவர்கள் விவரம்:
ஹரியானா மாநிலம் மகேந்திரகரை சேர்ந்த பவ்யா குன்வால் (தங்கம்).
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்த சௌமில் மைட்டி (வெள்ளி).
ராஜஸ்தானின் பாலியை சேர்ந்த நிஷித் கலானி (வெள்ளி).
பஞ்சாப் மாநிலம் மான்சாவை சேர்ந்தவர் அன்மோல் குமார் (வெள்ளி).
இந்த ஆண்டு சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் 78 நாடுகளிலிருந்து 307 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தமாக 31 தங்கம், 61 வெள்ளி, 91 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா பங்கேற்பது இது 26-வது முறையாகும். இதுவரை பங்கேற்ற 104 மாணவர்களில், 17 பேர் தங்கப் பதக்கங்களையும், 69 பேர் வெள்ளிப் பதக்கங்களையும், 17 பேர் வெண்கலப் பதக்கங்களையும், ஒருவர் சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில், தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் வென்றவர்களின் விகிதம் முறையே 25%, 68% ஆக இருந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286279®=3&lang=1
****
TV/SMB/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2286354)
வருகையாளர் எண்ணிக்கை : 54