இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
'மை பாரத்' மூலம் ஒரு லட்சம் இளம் தலைவர்கள் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை நனவாகி வருகிறது: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUL 2026 5:28PM by PIB Chennai
இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரங்கள் துறை, ' மேரா யுவ பாரத்' (MY Bharat) எனப்படும் மை பாரத் அமைப்பு மூலம், லக்னோவில் சிந்தனை முகாம் நிகழ்ச்சியைத் நடத்தியது. இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியில் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்தும் வகையில், எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு இளைஞர் சூழலை உருவாக்குவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மை பாரத், நாட்டு நலப் பணித் திட்டம் (என்எஸ்எஸ் - NSS), மாவட்ட இளையோர் அலுவலர்கள், களப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம், கொள்கை உருவாக்கம் ஆகியவற்றின் மூலம், செயலாக்கத்தை வலுப்படுத்த இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் கட்சே, உத்தரப் பிரதேச அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு கிரிஷ் சந்திர யாதவ் உள்ளிட்டோர் தொடக்க அமர்வில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய திரு மன்சுக் மாண்டவியா, 'மை பாரத்' அமைப்பு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று விவரித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி வழிநடத்தக்கூடிய திறமையான இளம் தலைவர்களை உருவாக்க இந்தத் தளம் நிறுவப்பட்டுள்ளது என்றார். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையைக் குறிப்பிட்ட அவர், 'மை பாரத்' மூலம் இது நனவாகும் என்றார். இளம் தலைவர்கள் கலந்துரையாடலை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய படியாக, இதில் தேசிய கலந்துரையாடலுடன் மாநில அளவிலான பதிப்புகளும் சேர்க்கப்படும் என்று திரு மன்சுக் மாண்டவியா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286091®=3&lang=1
***
TV/PLM/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2286123)
வருகையாளர் எண்ணிக்கை : 52