PIB Backgrounder
பாரத் டெக்ஸ் 2026: ஒவ்வொரு இழையும் ஒரு புதிய வாய்ப்பைத் திறக்கும் இடம்
प्रविष्टि तिथि:
17 JUL 2026 7:04PM by PIB Chennai
பாரத் டெக்ஸ் 2026 கண்காட்சியில், ஒரே குடையின் கீழ் ஒன்று கூடிய பன்முகத்தன்மையின் மூலம் இந்தியாவின் ஜவுளித் துறைக்கான லட்சியம் உயிர்பெறுகிறது. கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், பாரம்பரிய கலைஞர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தியாளர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துகின்றனர். இந்திய நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளை ஆராய்ந்து வரும் வேளையில், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை மதிப்பிடுகின்றன.
இதன் மூன்றாவது பதிப்பு , புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜூலை 14 முதல் 17 வரை நடைபெற்றது . இது நார், நூல், துணி, ஆடை, வீட்டு உபயோக ஜவுளிகள், தொழில்நுட்ப ஜவுளிகள், கைத்தறி, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி மதிப்புச் சங்கிலியை உள்ளடக்கியுள்ளது. இந்த நிகழ்வு , 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6,000-க்கும் அதிகமான வாங்குபவர்களையும் , 1.3 லட்சத்திற்கும் அதிகமான வர்த்தகப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்த இந்தக் கண்காட்சியில், 20,000-க்கும் மேற்பட்ட ஜவுளிப் பொருட்கள் இடம்பெற்றன.
கண்காட்சியின் பிரம்மாண்டத்தைத் தாண்டி, அங்கீகாரம், வாழ்வாதாரங்கள், உள்ளூரில் வேரூன்றிய தொழில் நிறுவனங்களைப் புதிய சந்தைகளுக்குக் கொண்டு செல்வது குறித்த உரையாடல்களின் மூலம் பாரத் டெக்ஸின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. இந்த நிகழ்வு, பாரம்பரியம், தொழில்முனைவு, நிலைத்தன்மை, உலகளாவிய வர்த்தகம் ஆகியவற்றுக்கான ஒரு மையமாக உருவெடுத்துள்ளது.
பல்வேறு தயாரிப்புகள், செயல்முறைகள், சாத்தியக்கூறுகளை ஒன்றிணைப்பதன் மூலம், பாரத் டெக்ஸ் இந்தியாவின் ஜவுளிச் சூழலமைப்பின் பரந்த தன்மையை ஒரே இடத்தில் வழங்கியது .
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285881®=3&lang=1
(Release ID : 2285881)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2285969)
आगंतुक पटल : 9