பாதுகாப்பு அமைச்சகம்
தேசப் பாதுகாப்பை வலுப்படுத்த எல்லை சாலைகள் அமைப்பு சிறப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
प्रविष्टि तिथि:
16 JUL 2026 1:26PM by PIB Chennai
போரின் வெற்றிக்கு அடிப்படை உட்கட்டமைப்புகளும் முக்கியமானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று (ஜூலை 16, 2026) புதுதில்லியில் நடைபெற்ற எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) உத்திசார் உட்கட்டமைப்பு மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
எல்லைப் பகுதிகளில் வலுவான உட்கட்டமைப்பை நிறுவுவதற்கும், தேசப் பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும் சிறப்புத் தொழில்நுட்பங்களை, எல்லை சாலைகள் அமைப்பு பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 65 ஆண்டுகளில், எல்லைச் சாலை நிறுவனம் வெறும் சாலை கட்டுமான நிறுவனம் என்பதை கடந்து உலகின் மிகவும் மதிக்கப்படும் உள்கட்டமைப்பு அமைப்புகளில் ஒன்றாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். அடல் சுரங்கப்பாதை, உம்லிங் லா கணவாய், சேலா சுரங்கப்பாதை போன்ற சாதனைகள், எல்லைச் சாலை நிறுவனத்தின் திறனுக்கும் கடின உழைப்புக்கும் வாழும் சான்றுகளாகத் திகழ்கின்றன என்று அவர் கூறினார். மேலும், தேசத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன், மிகக் கடுமையான சூழ்நிலைகளிலும்கூட எந்தவொரு சவாலையும் வெல்ல முடியும் என்பதை அதன் அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் பிஆர்ஓ-வை ஒரு முன்னணி அமைப்பாக அவர் குறிப்பிட்ட குறிப்பிட்டார். உலகின் மிகவும் சவாலான சில நிலப்பரப்புகளில் பிஆர்ஓ சாலைகளையும் நெடுஞ்சாலைகளையும் அமைக்கும் வேகம் முன்னெப்போதும் இல்லாதது என்று கூறிய அவர், இது மனித உறுதியும் நவீன தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த வலிமையும் இணைந்த பிரதிபலிப்பு இது என்று அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எல்லைச் சாலைகள் நிறுவனமான பிஆர்ஓ-வின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு அமைச்சர், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், பிஆர்ஓ-வின் பல்வேறு திட்டங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285293®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2285619)
आगंतुक पटल : 3