சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் காசநோய் பரிசோதனைக்கான மாதிரிகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்வது நோயாளிக்கு பயனளிக்கிறது

प्रविष्टि तिथि: 16 JUL 2026 10:45AM by PIB Chennai

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் தமது ஐ-ட்ரோன் திட்டத்தின் கீழ் ட்ரோன் மூலம் காசநோய் சளி மாதிரிகளை எடுத்துச் செல்வது ஊரக மற்றும் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் கண்டறிதல் சேவைகளை அளிப்பதை மேம்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், பிபி நகர் எய்ம்ஸ், மாவட்ட காசநோய் அலுவலகம்  ஆகியவற்றுடன் இணைந்து தெலங்கானாவில் எதாத்ரி – புவனகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இம்முடிவுகள் தெரியவந்துள்ளது. காசநோய் பரிசோதனைக்காக நோயாளிகள் நேரடியாக பயணம் செய்யும் முறையையும், ட்ரோன் மூலம் மாதிரிகளை எடுத்துச் செல்லப்படும் முறையையும் இந்த ஆய்வு ஒப்பிட்டது.

ட்ரோன் அடிப்படையிலான மாதிரிப் போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காசநோய் பரிசோதனைக்கான கால அளவு 15 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம்  நோயாளிகளின் செலவுகளும் குறைவது தெரியவந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285227&reg=3&lang=1   

***

SS/IR/KPG/RJ


(रिलीज़ आईडी: 2285607) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu