வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளில் விரிவடைய உதவும் வழிகாட்டியை வர்த்தக- முதலீட்டுச் சட்ட மையம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
16 JUL 2026 8:15PM by PIB Chennai
இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக- முதலீட்டுச் சட்ட மையம், இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, 'உலகளவில் முன்னேறுதல்: இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஒரு நடைமுறை வழிகாட்டி' என்ற புத்தகத்தை இன்று (16.07.2026) புது தில்லியில் வெளியிட்டது. ஏற்றுமதி வாய்ப்புகளைக் கண்டறிதல், சந்தை அணுகல் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல், இலவசமாகக் கிடைக்கும் வர்த்தக நுண்ணறிவுகளைப் பயன்படுத்துதல், சர்வதேச தரநிலைகள், நிலைத்தன்மை தேவைகளுக்கு இணங்குதல், ஏற்றுமதி தயார்நிலையை உருவாக்குதல் போன்றவற்றுக்காக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் ஒரு முழுமையான நடைமுறை ஆதாரமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டிப் புத்தகம் குறித்த ஒரு கண்ணோட்டத்தை சிஐஐ-யின் பிரதிநிதிகள் வழங்கினர்.
இந்த வழிகாட்டிப் புத்தகம், சந்தைத் தகவல்களைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், சர்வதேச தரநிலை சான்றிதழ்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்கள், விலைப் போட்டித்தன்மையை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட, குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை எடுத்துரைக்கிறது. இது சந்தைப் பகுப்பாய்வை எளிமையாக்கி, தரநிலை சான்றிதழ் தேவைகளை விளக்கி, வாங்குபவர்களை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டுதலை வழங்கி, ஒரு நடைமுறை வழிகாட்டு நெறிமுறையை வழங்குகிறது. இந்த வெளியீடானது, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தகவலறிந்த வணிக முடிவுகளை எடுக்கவும், சர்வதேச வர்த்தகத்தில் மிகவும் திறம்படப் பங்கேற்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285519®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2285577)
आगंतुक पटल : 14