நித்தி ஆயோக்
வடகிழக்கு பகுதிகளுக்கான புத்தாக்க முன் முயற்சிகளுக்கான நிதி ஆயோக்கின் அடல் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்க மாநாடு
प्रविष्टि तिथि:
15 JUL 2026 12:36PM by PIB Chennai
இந்தியாவின் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கானச் சூழலில் வடகிழக்கு மாநிலங்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் பகுதியாக உருவெடுத்து வரும் நிலையில், நிதி ஆயோக், புதுமைக் கண்டுபிடிப்பு இயக்க மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.
வடகிழக்கு பகுதிகளுக்கான புத்தாக்க முன் முயற்சிகளுக்கான இந்த மாநாடு அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்றது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களிலும் புத்தாக்கம் சார்ந்த மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், மாநில அரசுகள், தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் தொடங்குவதற்கான ஊக்குவிப்பு மையங்கள், புத்தொழில் சூழல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாகவும், வளமான பல்லுயிர் பெருக்கம், கலாச்சார பாரம்பரியம், மூங்கில் வளங்கள், பாரம்பரிய கைவினைப்பொருட்கள், விரைவான வளர்ச்சி கண்டு வரும் தொழில்முனைவோர் சூழல் அமைப்பு ஆகியவற்றைக் உள்ளடக்கிய பகுதியாகவும் வடகிழக்கு மாநிலங்கள் உருவெடுத்து வருவதால், இந்த மாநாடு சிறப்பு முக்கியத்துவம் பெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284722®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2285062)
आगंतुक पटल : 7