பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
15 JUL 2026 3:40PM by PIB Chennai
ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் ரூ.3,907 கோடி செலவில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
பாரதீப் – ஹரிதாஸ்பூர் இடையே இரட்டை வழிப்பாதை அமைப்பதற்கும் ராஜ்கர்சவான் – தன்கோவாபோஸி இடையே 4-வது வழித்தடம் அமைப்பதற்கும் இத்திட்டத்தின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 145 கிமீ அளவிற்கு அதிகரிக்கும். இந்தப் பல்தடத்திட்டம் சுமார் 14 லட்சம் பேர் வசிக்கும் 1,526 கிராமங்களுக்கு போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும்.
லலித்கிரி புத்தவளாகம், ஸ்ரீ பாலதேவ்ஜீவ் கோவில், மேகஹத்துபுரு ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சுற்றுலா தளங்களுக்கு ரயில் போக்குவரத்து இணைப்பிற்கு வழிவகுக்கும்.
இத்திட்டங்கள், நிலக்கரி, இரும்புத்தாது, டோலமைட், சுண்ணாம்புக்கல், ஜிப்சம் போன்ற சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய வழித்தடங்களாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 44 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்து நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284807®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2285049)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam