மாநிலங்களவைச் செயலகம்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்
प्रविष्टि तिथि:
15 JUL 2026 2:13PM by PIB Chennai
மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான திரு மன்சூர் அலி கான், திரு ரஜ்னீஷ் குமார் அகர்வால் ஆகியோருக்கு மாநிலங்களவைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
திரு மன்சூர் அலி கான் ஆங்கிலத்திலும், திரு ரஜ்னீஷ் குமார் அகர்வால் இந்தியிலும் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். இரண்டு உறுப்பினர்களும் முறையே கர்நாடகா, மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல் முருகன், மாநிலங்களவை உறுப்பினர் திரு ஜெய்ராம் ரமேஷ், மாநிலங்களவைச் செயலாளர் திரு பி சி மோடி, மாநிலங்களவைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2284757)
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2285045)
आगंतुक पटल : 7