ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கம் 2.0: மாவட்ட ஆட்சியர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
प्रविष्टि तिथि:
14 JUL 2026 4:09PM by PIB Chennai
மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களின் 10-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. ஜல்சக்தி துறை செயலாளர் திரு அசோக் கே.கே. மீனா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஜல் ஜீவன் இயக்கம் 2.0 திட்டத்தை விரைந்து செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குடிநீர் விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவதோடு கிராமப்புறங்களுக்குத் தடையற்ற வகையில், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பொதுமக்களின் பங்களிப்புடன் கிராமப்புறக் குடிநீர் விநியோக முறைகளைப் பராமரிப்பதன் அவசியத்தை அதிகாரிகள் வலியுறுத்தினர். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் குடிநீர் ஆதாரங்களை வரைபடமாக்குதல், புவிசார் குறியீடு வழங்குதல் போன்ற பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் கின்னர், ஆவேரி, தும்கா, தெற்கு கோவா, உனகோடி ஆகிய ஐந்து மாவட்டங்களில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், புதுமையான செயல்பாடுகள் குறித்து பிற மாவட்டங்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284469®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2284644)
आगंतुक पटल : 12