குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்த உதவும் உதயம் இணையதளம்

प्रविष्टि तिथि: 14 JUL 2026 2:08PM by PIB Chennai

மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் டிஜிட்டல் முன்முயற்சிகளான உதயம் பதிவு இணையதளம், உதயம் உதவித் தளம் ஆகியவை தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தி, அரசு உதவிகளை எளிதாகப் பெற வழிவகை செய்கின்றன. எளிய, காகிதமில்லா, இந்த இலவச ஆன்லைன் பதிவு முறை, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வ அடையாளத்தை வழங்குகிறது. ஜிஎஸ்டி அல்லது வருமான வரி வரம்பிற்குள் வராத முறைசாரா சிறு நிறுவனங்களும் இதன் கீழ் முறைப்படுத்தப்பட்டு சான்றிதழ்களைப் பெற முடிகிறது. 

இத்திட்டம் பெண் தொழில்முனைவோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், கிராமப்புற நிறுவனங்கள், பாரம்பரிய கைவினைக்கலைஞர்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கு உள்ளடக்கிய ஆதரவை வழங்குகிறது. பதிவு பெற்ற நிறுவனங்கள் எளிய முறையில் கடன் பெறவும், நிலுவைத் தொகை தாமதமாவதை தவிர்த்து, பொதுக் கொள்முதல், சந்தை மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்கவும் தகுதி பெறுகின்றன. தற்போது நாடு முழுவதும் 8.9 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் இதில் பதிவு செய்து, 38 கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளன. இது வளர்ச்சியடைந்த இந்தியா 2047 தொலைநோக்கு பார்வையை எட்ட உதவுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284414&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2284619) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Kannada