பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றி தினம் 2026: தேசிய போர் நினைவிடத்திலிருந்து மோட்டார் சைக்கிள் பயணத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 14 JUL 2026 1:00PM by PIB Chennai

கார்கில் வெற்றி தினம் 2026-ன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 'சௌர்யா வெற்றி யாத்திரை' என்ற 13 நாட்கள் நடைபெறும் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வுப் பயணத்தை புதுதில்லி தேசிய போர் நினைவிடத்திலிருந்து இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வுப் பயணம் லடாக் பகுதியிலுள்ள டிராஸ் கார்கில் போர் நினைவிடம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் தற்போதைய இராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 28 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 1,900 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் மேற்கொண்டு, 1999 கார்கில் போரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடித்தந்த இந்திய வீரர்களின் துணிவு, அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு வீரவணக்கம் செலுத்தவுள்ளனர். 'ஒரு பயணம், ஒரு தேசம், ஒரு வீர வணக்கம்' என்ற முதன்மை முழக்கத்தின் அடிப்படையில் இப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், சுமார் 20,000 அடி உயரத்தில், -40 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் எதிரிகளிடமிருந்து ஒவ்வொரு பதுங்கு குழியையும் மீட்டெடுத்த இந்திய வீரர்களின் இணையற்ற தேசபக்தியை உலகமே வியந்து நோக்குகிறது என்று புகழாரம் சூட்டினார். கார்கில் வெற்றி என்பது நமது நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் எந்தவொரு எதிரிக்கும் இந்தியா தன் முழு வலிமையுடன் பதிலடி கொடுக்கும் என்பதற்கான அடையாளமாகும். பரம் வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே போன்ற மாவீரர்களின் தியாகங்களை இளைய தலைமுறையினர் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284394&reg=3&lang=1

 

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2284489) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Malayalam