விவசாயத்துறை அமைச்சகம்
மேற்கு வங்கத்தில் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
प्रविष्टि तिथि:
13 JUL 2026 2:22PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் செளகான், மேற்கு வங்க மாநிலத்தில் 2026 ஜூலை 13, 14 ஆகிய இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். அப்போது வேளாண் மற்றும் ஊரக மேம்பாடு குறித்து முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரியிடம் அவர் விவாதிக்க உள்ளார். இதற்கிடையே, சணல் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஆகியோருடன் அவர் உரையாட உள்ளார்.
ஜூலை 13 அன்று மாலை கொல்கத்தா செல்லும் அவர், நேரடியாக முதலமைச்சர் இல்லத்திற்குச் செல்கிறார். அங்கு வேளாண்மை, விவசாயிகள் நலத்திட்டங்கள், ஊரகப் பகுதிச் சாலைகள், வீட்டு வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
ஜூலை 14 அன்று கொல்கத்தாவில் புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர், தலைமைச் செயலாளர், சம்பந்தப்பட்ட மாநில அரசுத்துறை உயர் அதிகாரிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சருடன் வேளாண், விவசாய நல அமைச்சகம், ஊரக மேம்பாடு அமைச்சகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284066®=3&lang=1
***
SS/IR/KPG/SE
(रिलीज़ आईडी: 2284255)
आगंतुक पटल : 8