பிரதமர் அலுவலகம்
புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் திரு ரகு ராயின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
26 APR 2026 8:34PM by PIB Chennai
புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் திரு ரகு ராயின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது லென்ஸ் மூலம் இந்தியாவின் துடிப்பிற்கு உயிரூட்டிய ஒரு படைப்பாற்றல்மிக்க ஆளுமை என்று அவரைப் பிரதமர் புகழந்தார். திரு ரகு ராயின் படைப்புகள், அசாதாரணமான உணர்திறன், ஆழம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தன என்றும், அவை இந்தியாவின் பல பரிமாணங்களைப் படம்பிடித்து, அவற்றை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வந்தன என்றும் திரு மோடி குறிப்பிட்டார். புகைப்படம் மற்றும் கலாச்சார உலகிற்கு அவர் இணையற்ற பங்களிப்பை வழங்கினார் என்றும், அவரது மறைவு கலை சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டதாவது:
“திரு ரகு ராய், தனது லென்ஸ் மூலம் இந்தியாவின் துடிப்பைப் படம்பிடித்த ஒரு படைப்பாற்றல் மிக்க ஆளுமையாக நினைவுகூரப்படுவார். அவரது புகைப்படங்கள் அசாதாரணமான உணர்திறன், ஆழம் மற்றும் பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்தின. அவை இந்திய மக்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் மக்களை நெருக்கமாக இணைத்தன. அவரது மறைவு, புகைப்பட மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினர், அபிமானிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”
***
(Release ID: 2255754)
SS/RB/SH
(रिलीज़ आईडी: 2284224)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam