விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்க உள்ளார்

प्रविष्टि तिथि: 11 JUL 2026 9:03PM by PIB Chennai

2026 ஜூலை 12 அன்று புதுதில்லியின் பூசா வளாகத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது, நாடு முழுவதிலுமிருந்து வருகை தரும் சுமார் 17,000 சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் (மரங்களின் நண்பர்கள்) அவர் கலந்துரையாடுவார்இந்த விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், நேரில் பங்கேற்கும் 500-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஒன்றிணைவார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16,000-க்கும் மேற்பட்டோர் காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்களான அனில் ஜோஷி மற்றும் அனுப் ஹஜேலா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மக்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

விழாவின் ஒரு பகுதியாக, பசுமையான இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது, மக்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு கூட்டுத் தேசியப் பொறுப்பு என்ற செய்தியை வலுப்படுத்தும் வகையிலும், பூசா வளாகத்தில் பங்கேற்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து திரு சிவராஜ் சிங் சவுகான் மரம் நடும் பணியை மேற்கொள்வார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283774&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2283890) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Kannada , Malayalam