அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2026 செப்டம்பர் 10 முதல் 19 வரை நாடு தழுவிய கடலோரத் தூய்மை இயக்கத்திற்கு பல்வேறு துறைகள் தயாராகி வருகின்றன
தேசிய அறிவியல் நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவத்து குறித்த உயர்நிலைக் கூட்டத்திற்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
12 JUL 2026 1:54PM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (12.07.2026) மத்திய அரசின் அறிவியல் சார்ந்த துறைகளின் செயலாளர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். மேலும், தேசிய முன்னுரிமைகளை விரைவாகச் செயல்படுத்துவதற்கு அறிவியல் நிறுவனங்களிடையே தடையற்ற ஒருங்கிணைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
2026 செப்டம்பர் 10 முதல் 19 வரை நடைபெறவுள்ள 'ஸ்வச் சாகர், சுரக்ஷித் சாகர்' என்ற பெயரிலான நாடு தழுவிய கடலோரத் தூய்மைப் இயக்கத்திற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தொழில்நுட்பப் புத்தாக்கம், பொதுமக்களின் பங்கேற்பு, துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை அதிகரித்து, அதிகபட்ச சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த அறிவியல் நிறுவனங்கள் நெருங்கிய ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
புது தில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட், அறிவியல், தொழில்நுட்பத் துறைச் செயலாளர் பேராசிரியர் உமேஷ் வி. வாக்மரே, உயிரி தொழில்நுட்பத் துறை, செயலாளர் டாக்டர் ராஜேஷ் எஸ். கோகலே, உட்பட சம்பந்தப்பட்ட அறிவியல் துறைகள், அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முந்தைய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான நடவடிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்த டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல் துறைகள் தனித்தனி நிறுவனங்களாகச் செயல்படாமல், ஒருங்கிணைந்த சூழலமைப்பாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அமைச்சகங்களுக்கு இடையேயான வழக்கமான கலந்துரையாடல், அறிவுப் பகிர்வு, கூட்டு முயற்சிகள், ஒருங்கிணைந்த செயலாக்கம் ஆகியவை புத்தாக்கத்தை விரைவுபடுத்தவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும், அறிவியல் சாதனைகள் மக்களுக்கு நேரடியாகப் பயனளிப்பதை உறுதி செய்யவும் உதவும் என்று அவர் கூறினார்.
2026 செப்டம்பர் 10 முதல் 19 வரை நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்படவுள்ள 'ஸ்வச் சாகர், சுரக்ஷித் சாகர்' என்ற கடலோரத் தூய்மை இயக்கம், இக்கூட்டத்தின் முக்கிய மையப் பொருளாக இருந்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை, பொது விழிப்புணர்வு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நாடு தழுவிய முன்முயற்சியை, மக்களைச் சென்றடையச் செய்வதற்கான உத்தி குறித்தும் ஆயத்தப் பணிகள் குறித்தும் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை நடத்தினார். நாட்டின் மிகப்பெரிய கடற்கரைத் தூய்மை இயக்கங்களில் ஒன்றான இந்த இயக்கம், அறிவியல் நிறுவனங்கள், அரசு முகமைகள், தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள், உள்ளூர் சமூகங்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283839®=48&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2283864)
आगंतुक पटल : 11