நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெரிய அளவிலான சைபர் மோசடியை கண்டறிந்த இந்திய நிதிப் புலனாய்வு அமைப்பிற்கு சர்வதேச விருது

प्रविष्टि तिथि: 10 JUL 2026 6:46PM by PIB Chennai

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற எக்மாண்ட் குழுமத்தின் மாநாட்டில், பெரிய அளவிலான சைபர் மோசடி தொடர்பான வழக்கை மிகச் சிறப்பாகக் கையாண்டதற்காக இந்திய நிதிப் புலனாய்வு அமைப்பு புகழ்பெற்ற சிறந்த எக்மாண்ட் வழக்கு விருது 2026-ல் இரண்டாம் இடம் பெற்றது. இந்திய நிதிப் புலனாய்வு அமைப்பின் இயக்குநர் திரு அமித் மோகன் கோவில் தலைமையிலான குழுவின் செயல்பாட்டிற்கு இந்தச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் அளித்த தகவலின் அடிப்படையில் புலனாய்வு செய்த இந்த அமைப்பு, சைபர் மோசடியில் சுமார் 868 கோடி ரூபாய் நிதியை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த மோசடி அமைப்பைக் கண்டறிந்தது. 5,000-க்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகள், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் மூலம் சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த மோசடியை முறியடிக்கப் பல்வேறு நாடுகளின் நிதிப் புலனாய்வு அமைப்புகளுடன் தகவல்கள் பரிமாறப்பட்டன. இந்தத் துல்லியமான பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரொக்கப் பணம், கிரிப்டோகரன்சி, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283407&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2283461) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Gujarati , Telugu