ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தா மெட்ரோ ரயில்திட்டத்தின் ஊதா நிற வழித்தடப் பணிகள்: சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரம் ‘துர்கா’ இலக்கை எட்டி சாதனை

प्रविष्टि तिथि: 10 JUL 2026 5:53PM by PIB Chennai

கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்டத்தின் ஜோகா-எஸ்பிளனேடு வழித்தடத்தில் கிதிடர்பூர், விக்டோரியா இடையேயான சுரங்கப்பாதைத் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரமானதுர்காவிக்டோரியா மெட்ரோ ரயில் நிலையப்பகுதியில் இன்று தனது இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை 10 அன்று தொடங்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி பொறியியல் திறனுக்கும் துல்லியமான திட்டமிடலுக்கும் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

சுரங்கப்பாதை தோண்டும்போது மேற்பரப்பு சாலையில் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மெட்ரோ வழித்தடம் கொல்கத்தாவின் தெற்குப் பகுதிகளை மத்திய வணிகப் பகுதியுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்தின் கிழக்கு-மேற்கு பகுதிகளுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283383&reg=3&lang=1   

***

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2283433) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Kannada