சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு: ஆகஸ்ட் 18 அன்று தேசிய உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUL 2026 5:56PM by PIB Chennai
போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் ஆறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 18 அன்று நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது. தேசிய அளவிலான இந்நிகழ்விற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் நேரடியாகவும் இணையவழியாகவும் 12 கோடிக்கும் அதிகமானவர்களை ஒருங்கிணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான செயல்பாட்டு உத்திகளை இறுதி செய்வதற்கான உயர்நிலை ஒருங்கிணைப்புக் கூட்டம் போதைப்பொருள் தடுப்புத் துறை இணைச் செயலாளர் டாக்டர் சந்தீப் ரேவாஜி ரத்தோடு தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, பாதுகாப்புத் துறை, ஆயுஷ், ஊரக மேம்பாட்டுத் துறை, பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள் பங்கேற்று தங்களின் பங்களிப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283379®=3&lang=1
***
TV/PD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2283423)
வருகையாளர் எண்ணிக்கை : 62