சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருந்து தயாரிப்பில் ஆல்கஹால் பயன்பாட்டை முறைப்படுத்த மருந்து விதிகள் 1945-ல் அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
10 JUL 2026 11:49AM by PIB Chennai
மருந்துப் பொருட்களில் அதிகளவில் ஆல்கஹால் இருப்பதில் கவனக் குறைவை முறைப்படுத்தவும், தவறானப் பயன்பாட்டை தடுக்கவும், குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக (பட்டியல் கே-ன் கீழ்) தற்போதுள்ள விதி விலக்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் நீக்கியுள்ளது.
ஏலக்காய், இஞ்சி மற்றும் இதர நறுமண பொருட்களில் இருந்து வடிக்கப்படும் சாறுகள் மூலம் தயாரிக்கப்படும் மருத்துவ பொருட்களுக்கு மருத்துவ விதிகள் 1945-ல் பட்டியல் கே-ன் கீழ் உரிமத் தேவைகளுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய மருந்துப் பொருட்களில் எத்தில் ஆல்கஹாலின் அளவு 9 முதல் 90 சதவீதம் வரை இருப்பதாக சில மாநிலங்களிலிருந்து குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதையடுத்து, இவற்றில் எத்தில் ஆல்கஹாலின் அளவு 12 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும் வகையில் மருந்துகள் மற்றும் நறுமணப் பொருட்கள் சட்டம் 1940-ன் கீழ் உரிமம் பெறுவது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசிதழ் அறிவிக்கை விவரம் https://egazette.gov.in/WriteReadData/2026/274311.pdf என்ற இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283196®=3&lang=1
***
TV/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2283418)
आगंतुक पटल : 9