சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயரமான மலைப்பகுதியில் பொது சுகாதார ஆராய்ச்சி மையம் - கீலாங்கில் 11-ம் தேதி மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா அடிக்கல் நாட்டுகிறார்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 12:41PM by PIB Chennai

மத்திய சுகாதாரம்குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டாஇமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் - ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள கீலாங்கில்நாளை மறுநாள் (2026 ஜூலை 11), நாட்டின் உயரமான மலைப்பகுதியில் அமைக்கப்படும் மருத்துவ- பொது சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) அமைக்கப்படும் இந்த மையம்கீலாங்கில் உள்ள ஐசிஎம்ஆர்-ன் தற்போதைய மையத்தைஆராய்ச்சிபுத்தாக்கம்திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு முழுமையானபல்துறை மையமாக மேம்படுத்தும்.

இமயமலைச் சூழலமைப்புஅதிக உயரம்தீவிரமான பருவநிலை சூழல்கள்கடினமான நிலப்பரப்பு போன்ற தனித்துவமான பொது சுகாதார சவால்கள் இப்பகுதியில் உள்ளன. நோய்களின் தன்மைசுகாதார அணுகல்அவசரகால சிகிச்சை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. கீலாங் மையம்பரந்த அளவிலான ஆராய்ச்சிப் பிரிவுகளில் சூழலுக்கு ஏற்ற அறிவியல் சான்றுகளையும்தீர்வுகளையும் உருவாக்கும்.

ஜூலை 11-ம் தேதி நடைபெறும் விழாவில்இப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்கள்பாதுகாப்புத் துறைச் செயலாளர்இமாச்சலப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்மூத்த அதிகாரிகள்விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282741&reg=3&lang=1

***

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2283026) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati