தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் தொலைத்தொடர்பு, ஒலிபரப்புச் சூழலமைப்பை வலுப்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தம்

प्रविष्टि तिथि: 08 JUL 2026 7:29PM by PIB Chennai

மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத் துறையின், தொழில்நுட்பப் பிரிவான தொலைத்தொடர்புப் பொறியியல் மையம், ஒருங்கிணைப்பு, ஒலிபரப்புத் தொழில்நுட்பத் துறைகளில் ஒருங்கிணைந்த ஆய்வுகள், தொழில்நுட்பப் பங்களிப்பு, தரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதற்காக, மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், இயங்கும் மினி ரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா போன்ற தேசிய முன்முயற்ச்சிகளுக்கு உதவிடுவதுடன், ஒருங்கிணைந்த, ஒலிபரப்புத் தொழில்நுட்பங்களில் தரப்படுத்தல், புத்தாக்கத்திற்கான தேசியத் திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், இந்தியாவிற்கான பிரத்யேகத் தரநிலைகள், சோதனைக் கட்டமைப்புகளை உருவாக்குதல், சர்வதேசத் தரநிலைகள் குறித்த ஆய்வு, உலகளவில் தரப்படுத்தல் அமைப்புகளுக்குத் தொழில்நுட்பப் பங்களிப்பு வழங்குதல், ஒருங்கிணைப்பு, ஒளிபரப்புத் தொழில்நுட்பங்களில் உருவாகி வரும் தொழில்நுட்ப செயல்பாடுகளை ஆராய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282582&reg=3&lang=1

(Release ID:2282582)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2282647) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam