உள்துறை அமைச்சகம்
முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் திரு அமித் ஷா, திரு ராம்மோகன் நாயுடு ஆய்வு
प्रविष्टि तिथि:
08 JUL 2026 4:27PM by PIB Chennai
நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆவணங்களை சரிபார்த்தல் முறை ஆகியவற்றை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு கிஞ்சரப்பு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், உளவுத்துறை இயக்குநர், விமானப் போக்குவரத்துத்துறைச் செயலாளர், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர், இந்திய விமான நிலையங்கள் ஆணையத் தலைவர், உள்துறை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை உயர்அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விமான நிலையங்களில் உள்ள நுழைவுப் பாதைகள், சோதனையிடப்படும் பகுதிகள், பாதுகாப்பு சோதனைப் பகுதிகள், ஆவணங்களைச் சரிபார்த்தல் அரங்குகளுக்கு இடையே பயணிகள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படமால் இருக்கும் வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று திரு அமித் ஷா உத்தரவிட்டார்.
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில் சிவில் விமானப் போக்குவரத்து, பாதுகாப்பு அமைப்பு வகுத்துள்ள பாதுகாப்பு தரநிலைகளின்படி, தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் 21 விமான நிலையங்கள், எஞ்சியுள்ள 41 விமான நிலையங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகளுக்கு பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று திரு அமித் ஷா அறிவுறுத்தினார். அத்துடன் இந்த 62 விமான நிலையங்களின் பணிகளையும் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282445®=3&lang=1
****
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2282537)
आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam