சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாபு ஜெகஜீவன் ராமின் 40-வது நினைவு தினம்: மத்திய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

प्रविष्टि तिथि: 06 JUL 2026 9:38PM by PIB Chennai

பாபு ஜெகஜீவன் ராமின் 40-வது நினைவு தினத்தையொட்டி மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாபு ஜெகஜீவன் ராம் தேசிய அறக்கட்டளை சார்பில் புதுதில்லியில் உள்ள சமதா ஸ்தலத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (06.07.2026) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணா மேனன் மார்க் வளாகத்தில் பிரார்த்தனை கூட்டமும் நடத்தப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், முன்னாள் மக்களவைத் தலைவர் திருமதி மீரா குமார், மத்திய இணையமைச்சர் திரு பி எல் வர்மா, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாபு ஜெகஜீவன் ராம், மத்திய அமைச்சராக 35 ஆண்டுகள் நாட்டுக்கு சேவையாற்றினார். பசுமைப் புரட்சியை மேம்படுத்தி நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததில் உணவு, வேளாண் அமைச்சராக அவர் முக்கியப் பங்கு வகித்தார். அதேபோல் 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த அவரது தலைமைத்துவம் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281848&reg=3&lang=1

***

SS/PD/KR

 


(रिलीज़ आईडी: 2282388) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada