மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2025-26-ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரவரிசைக் குறியீடு 2.0 : மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு
प्रविष्टि तिथि:
07 JUL 2026 6:22PM by PIB Chennai
2025-26-ஆம் ஆண்டிற்கான செயல்திறன் தரவரிசைக் குறியீட்டை (பிஜிஐ 2.0) மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கல்வி அமைப்புகளைக் கொண்ட இந்தியாவில், 14.67 லட்சம் பள்ளிகள், 1.03 கோடி ஆசிரியர்கள் மற்றும் சுமார் 24.72 கோடி மாணவர்கள் உள்ளனர்.
மாநிலங்களுக்கான குறியீடு : இது 1000 புள்ளிகளைக் கொண்டு, கற்றல் விளைவுகள், அணுகல், உள்கட்டமைப்பு, சமத்துவம், ஆளுமை மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகிய 6 முக்கியத் துறைகளில் மாநிலங்களின் செயல்பாட்டை மதிப்பிடுகிறது.
மாவட்டங்களுக்கான குறியீடு : இது 600 புள்ளிகளைக் கொண்டு, 6 பிரிவுகள் மற்றும் 11 முக்கியத் துறைகளில் மாவட்டங்களின் கல்விச் செயல்பாட்டை ஆய்வு செய்கிறது. இதில் வகுப்பறைச் செயல்பாடுகள், பள்ளி பாதுகாப்பு, டிஜிட்டல் கற்றல் மற்றும் நிதிப் பயன்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், தரவுகளின் அடிப்படையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்குவதையும் இந்த மதிப்பீட்டு முறை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தரவரிசைகள் UDISE+, PARAKH மற்றும் பிரபந்தம் போன்ற அதிகாரப்பூர்வ இணையதளத் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. விரிவான அறிக்கைகளை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் காணலாம்.
விரிவான தகவல்களுக்கு பார்க்கவும்
https://spgi.udiseplus.gov.in/
https://dpgi.udiseplus.gov.in/
https://www.dsel-education.gov.in/documents
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282148®=3&lang=1
செய்தி அடையான எண்:2282148
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2282292)
आगंतुक पटल : 19