குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUL 2026 12:52PM by PIB Chennai
புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனின் பிறந்தநாளையொட்டி புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் அவரது உருவப்படத்திற்கு குடியரசுதுணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.07.2026) மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய குடியரசு துணைத்தலைவர், “இரட்டைமலை சீனிவாசன் ஒரு சிறந்த அறிஞர். புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி. தீண்டாமைக்கு எதிரான அவரது போராட்டம் ஈடு இணையற்றது” என்று கூறினார்.
தீண்டாமை எனும் சமூகத் தீமையை எதிர்த்துப் போராட இரட்டைமலை சீனிவாசன் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார் என்றும், ஒவ்வொரு தனிநபரின் சுயமரியாதையும் கண்ணியமும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் உறுதியாக நம்பினார் என்றும் குடியரசு துணைத்தலைவர் கூறினார்.
***
(Release ID: 2281910)
SS/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2281985)
வருகையாளர் எண்ணிக்கை : 62