வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தொழில்நுட்பம் சார்ந்த இருமொழி நிர்வாகக் கல்வி ஊரகம் – நகர்ப்புற பாகுபாட்டை நீக்கும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
प्रविष्टि तिथि:
06 JUL 2026 4:40PM by PIB Chennai
தொழில்நுட்பம் சார்ந்த இருமொழி நிர்வாகக் கல்வி மாணவர்களின் சூழ்நிலைகளுக்கு அப்பால் திறமை மிக்க, தேவைப்படும் மாணவர்களுக்கு தரமான கல்வி அணுகலை தருவதோடு ஊரகம் - நகர்ப்புற பாகுபாட்டை நீக்க உதவும் என்று மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உதய்பூர் இந்திய நிர்வாக கல்விக் கழகத்தின் புதிய பாடப்பிரிவை புதுதில்லியில் இருந்து இன்று (06.07.2026) காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்துப் பேசிய அவர், இணைய வழியிலான வணிக நிர்வாக இளநிலை இருமொழி பாடப்பிரிவு தனித்துவமான முன்முயற்சி என்று குறிப்பிட்டார். இது நிர்வாகக் கல்வியை எளிதாகவும் புரிந்துகொள்ளும் மொழியிலும் வழங்குவதன் மூலம் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
இந்தியாவில் 100 கோடி இணையப் பயன்பாட்டாளர்கள் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் தரமான கல்வியை பெருமளவில் வழங்க, தொழில்நுட்பம், டிஜிட்டல் முறைகள் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். மெய்நிகர் வழியில் கற்பித்தல் முறையை நாடு முழுவதும் விரிவாக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையவழிக் கல்வியும் வெகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
நிர்வாகக் கல்வி என்பது பள்ளி கல்லூரி அல்லது வகுப்பறையில் கற்றல் என்பதோடு நின்றுவிடாமல் மாணவர்களிடையே கலந்துரையாடல் நடப்பதற்கும் வழிவகுக்க வேண்டும். தொழில்நுட்பத்தில் ஆழமான அறிவு, தகவல் தொடர்பு திறன்கள் அணிமுறையிலான பணிகள், கலாச்சாரப் பரிவர்த்தனைகள், கலந்துரையாடல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனுபவக் கற்றலுக்காக தொழிற்கூடங்கள், துறைமுகங்கள், தொழில்துறை தொகுப்புகள் ஆகியவற்றிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும். புதிய கல்விக்கொள்கை மூலம், ஒலி ஒளி, டிஜிட்டல் கருவிகள் பயன்பாடு உள்ளிட்ட உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கல்வி நிறுவனம் ஏற்று செயல்படுத்த வேண்டும் என்ற யோசனைகளையும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் முன்வைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281679®=3&lang=1
***
SS/SMB/LDN/SH
(रिलीज़ आईडी: 2281799)
आगंतुक पटल : 12