நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அதிக கொள்ளளவுத் திறன் கொண்ட எடைபோடும் கருவிகளைச் சரிபார்ப்பதற்கான 'சட்டப்பூர்வ அளவீட்டு விதிகளை' மத்திய நுகர்வோர் விவகாரத் துறை திருத்தியமைத்துள்ளது

प्रविष्टि तिथि: 06 JUL 2026 3:54PM by PIB Chennai

வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கையின் ஒரு  முக்கிய நடவடிக்கையாகமத்திய நுகர்வோர் விவகாரத் துறை சட்டப்பூர்வ அளவீட்டு (பொது) விதிகள், 2011-ஐ திருத்தியமைத்துள்ளது. அறிவியல் ரீதியிலானமீள் திறன் சார்ந்த அளவியல் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்துவதன் மூலம்அதிக கொள்ளளவுத் திறன் கொண்ட எடைபோடும் கருவிகளைச் சரிபார்ப்பதற்குத் தேவைப்படும் தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களின் பயன்பாட்டு அளவை இது வெகுவாகக் குறைக்கிறது.

முந்தைய விதிகளின்படிஒரு டன் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகபட்ச கொள்ளளவு கொண்ட எடைபோடும் கருவிகளைச் சரிபார்க்கும்போதுநிலையான சுமைகளைப் பயன்படுத்தி மாற்றுவதற்கு முன்னதாககுறைந்தது ஒரு டன் அல்லது அந்தக் கருவியின் அதிகபட்ச கொள்ளளவில் 50 சதவீதம்இதில் எது அதிகமானதோஅந்த அளவுக்கான - தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த விதிமுறைதொழில் துறையினருக்கும்எடைமேடை இயக்குபவர்களுக்கும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க போக்குவரத்துச் சவால்கள்செலவுகள்நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தியது.

திருத்தயமைக்கட்ட விதிகளின் கீழ்இந்த எடைக் கற்களுக்கான தேவை முறைப்படுத்தப்பட்டுள்ளது. 'மீண்டும் மீண்டும் சரிபார்க்கும் திறன்சோதனையின் வெற்றிகரமான முடிவுகளின் அடிப்படையில்நிலையான சுமைகளைப் பயன்படுத்தி மாற்றுவதற்கு முன் தேவைப்படும் தரப்படுத்தப்பட்ட எடைக் கற்களின் கட்டாய அளவுஅதிகபட்ச கொள்ளளவில் 50 சதவீதத்திலிருந்துஐந்தில் ஒரு பங்காக (20 சதவீதம்) குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில்சரிபார்ப்பின் துல்லியம்,  நம்பகத்தன்மை ஆகியவற்றிற்கான நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளும் தொடர்ந்து பராமரிக்கப்படுகின்றன

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281653&reg=3&lang=1

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2281795) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada