மக்களவை செயலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்ததினத்தையொட்டி மக்களவைத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 06 JUL 2026 5:56PM by PIB Chennai

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்ததினத்தையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவருக்கு மலர்தூவி மரியாதை  செலுத்தினர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், நாடாளுமன்ற விவகாரங்கள், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, சட்டத்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை பொதுச்செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவை பொதுச்செயலாளர் திரு பி.சி. மோடி, பிற முக்கிய பிரமுகர்களும் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், கல்வியாளராகவும், அரசியல் ஆளுமை, தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் தீவிர ஆதரவாளராகவும் திகழ்ந்தவர். 1901-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி பிறந்த இவர், பொது வாழ்க்கை, கல்வி, நாட்டைக்  கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயது துணைவேந்தராகப் பணியாற்றிய இவர், பின்னர் இந்தியாவின் அரசியல், நாடாளுமன்ற செயல்பாடுகளில்  முக்கிய பங்காற்றியுள்ளார்.

முதலாவது மக்களவையின் உறுப்பினராக இருந்த டாக்டர் முகர்ஜி, தனது சிறந்த பேச்சாற்றல், வளமான ஞானம், ஜனநாயக விழுமியங்கள் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காகப் பெரிதும் மதிக்கப்பட்டவர். நாடாளுமன்ற விவாதங்கள், தேசிய விவகாரங்களில், அவர் ஆற்றியுள்ள பங்களிப்புகள், அக்காலத்தின் மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக அவருக்கு அங்கீகாரம்  பெற்றுத் தந்தன. நாட்டின் ஒற்றுமை, பொதுச் சேவைக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக  அவர் நினைவுகூரப்படுகிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் உருவப்படம் திரு என். எஸ். சுப்பகிருஷ்ணாவால் வரையப்பட்டது. இது 1991-ம் ஆண்டு மே 31-ம் தேதி அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் திரு ஆர். வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281747&reg=3&lang=1

(Release ID:2281747)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2281788) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu