நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
17-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டிக்கான பரிசளிப்பு விழா
प्रविष्टि तिथि:
06 JUL 2026 12:21PM by PIB Chennai
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற 2024 – 25-ம் ஆண்டுக்கான 17-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா 2026 ஜூலை 7 அன்று நடைபெற உள்ளது. புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி கலையரங்கில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால், போட்டியில் வெற்றிபெற்ற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும், சிறப்பாக பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்குவார். இந்தப் போட்டிகளில் முதலிடம் பெற்ற காஷ்மீர் பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் இளையோர் நாடாளுமன்ற போட்டிச் செயல்பாட்டை இந்த விழாவின்போது மீண்டும் நிகழ்த்திக் காட்டுவார்கள்.
நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் இத்தகைய போட்டிகளை கடந்த 29 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 17-வது இளையோர் நாடாளுமன்ற போட்டி 51 பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளிடையே நடைபெற்றது. தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்திற்கு “அடல் பிஹாரி வாஜ்பாய் நாடாளுமன்ற சுழற்கோப்பை” மற்றும் பட்டயம் வழங்கப்படும். இதுதவிர குழு அளவில் வெற்றிபெற்ற 7 பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கும் கோப்பைகளை அமைச்சர் இந்த விழாவில் வழங்குவார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281490®=3&lang=1
SS/SMB/LDN/SH
(रिलीज़ आईडी: 2281754)
आगंतुक पटल : 10